பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

11


அப்படியோர் காலம் வேண்டும்!


அப்படியோர் காலம் வேண்டும்
அடுக்களைத் தெய்வ மெல்லாம்!
உப்பினில், உரப்பில் கூட
ஒழுங்கினை, அடக்கம் தன்னைத்
தப்பின்றிக் காட்டிக் கற்புத்
தர்மத்தை அறத்தால் நிறுவி
'மப்பிலா நெஞ்சால் வட்டை
மகிழ்வித்த காலம் வேண்டும்!

இப்படியோர் காலம் வேண்டாம்!
இராணுவ விறைப்பி னோடு
தொப்புளும் மார்பும் துருத்தி
தொடைகளை வெளிச்சம போட்டு
செப்புருச் சிலைகள் போல
தெருவீதி சிரிக்கச் சுற்றி
'பப்பர பர’ வென்றே ஆகும்
பதிதைகள் காலம் வேண்டாம்!