பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வ.கோ. சண்முகம்


அந்தநாள் ராமன்; வைத்தா;
ஆறுமுகம்; காதர், பீட்டர்
பந்தியாக அமர்ந்த டங்கிப்
பாங்காகப் பதவி சாகச்
செந்தமிழ் நாவ சைத்தே
செழுமையாய் ‘ஆஆ’ கற்று
அந்தமிலாக் கல்வி ஞானம்
அடைந்ததோர் காலம் வேண்டும்

இந்தநாள் ஆனந்த், பாஸ்கர்,
இளங்கதிர்; சங்கர்; மோகன்
சிந்தையைச் சினிமா வாக்கி;
செய்கையைப் அரசிய லாக்கி
சொந்தத்தை 'ஹிப்பி யாக்கி;
சோதரத்தை வினாக்குறி யாக்கி
நொந்தழியும் கல்விச் சாலை
நுழைந்தாடும் காலம் வேண்டாம்