இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தைப்பாவாய்
13
அப்படியோர் காலம் வேண்டும்
அன்பறிவைத் தெய்வ மாகத்
துப்புரவாய் போற்றி நம்பித்
துதித்தருள் வரங்கள் கேட்டே
முப்பாலின நெறிகள் கண்ட
முதுமையை மதித்த மதத்தின்
ஒப்பனைகள்; நெருக்கல் இல்லா
உயர்பக்திக் காலம் வேண்டும்!
முப்பத்துக் சொச்சம் கோடி
முழுமையும் ஒன்றே யாகி
உப்புக்கும் உதிரம் ஈந்தே
ஒளிமிகும் சுதந்தி ரத்தை
எப்படியும் அடைவோம் என்றே
எக்காளம் ஊதிப் பாய்ந்த
அப்படியோர் காலம் வேண்டும்
ஆவேசக் காலம் வேண்டும்!