இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
வ.கோ. சண்முகம்
இப்படியோர் காலம் வேண்டாம்
இனம்ஜாதி மதங்கள் பேரால்
கொப்புளம்போல் கட்சி நூறு
கொடிதூக்கி ஜனநாயகத்தை
அப்படியே தலை கீழாக்கி
அராஜக அணி நடத்தும்
உப்புகின்ற வீரர் கும்பல்
உலாவரும் காலம் வேண்டாம்!
ஒருகுவளை நீரா காரம்,
ஓரைந்து ரூபாய்க் குள்ளே
அருமையாம் வைட்டமின்கள்
அடக்கியுள ரகசி யத்தை
அறிந்தவர்போல் தினமும் அதனை
அதிகாலைப் பருகிச் செழித்த
பெருமக்கள் ஆரோக் கியத்தைப்
பேசுமோர் காலம் வேண்டும்!