இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தைப்பாவாய்
15
ஒரு பக்கம் விடியு முன்னே
ஒருபாட்டில் புளிக்கும் மதுவை
நரிக்கறி ஆம்லட் டோடு
நாஷ்ட்டாவாய்ப் போணி செய்தே
நரை, திரை மூப்பு நோய்கள்
நாலாறு வயசுக் குள்ளே
விரைவாகப் பெற்றே குலையும்
விபரீதக் காலம் வேண்டாம்!
முக்காலணா சாம்பார் சாதம்!
மூன்றணாவில் முழுச்சாப்பாடு,
தக்காளி ரசவடை; அப்பளம்;
தயிர்துவையல், பாயசத் தோடு;
உட்காரச் சொல்லும் சர்வர்
உபச்சார நேர்த்தியே நேர்த்தி!
அக்கால உணவகம் கூட
அண்புக்கோர் பண்ணை ஆச்சு!