உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

17



இன்னுமோர் சுதந்திரம்!


வெள்ளியின் கொடியைக்
கீழே வீழ்த்தி
வீர சுதந்திர
தனிக்கொடி ஏற்றி
இமய பூமியில்
இருபத்தைந் தாண்டுகள்
பகலாய் இரவாய்
பறந்து விட்டன!

இருப்பினும் என்ன...?
இன்னுமோர் சுதந்திரம்
எட்டியே உள்ளது!
எங்கோ உள்ளது!
சமுதாய மேடுகள்
சரிவுகள் நீங்கி
நினைப்பில் நீதியில்
நிரவல்-பரவல்
ஏற்பட வேண்டும்!
ஏற்றம் அதுவே!