பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வ.கோ. சண்முகம்


வெள்ளையண் அகன்றும்,
விலங்குகள் அறுந்தும்
நமக்குக் கிடைத்த
‘நாட்டாட்சி’ ஒன்றே
‘விடுதலை’ ஆகுமா..?
வேறொன்றும் இல்லையா...?

பொருளா தாரத்தின்
புதிய வடிவமே
இனிறைய பாரத
இலட்சியப் பசியாம்!
இரவல் மூளையும்,
யாசக நிதியும்
பொருளா தாரத்தைப்
புடைக்கச் செய்யினும்
இரவல் இரவலே!
யாசகம் இழிவே!

சுதேச உணர்வு,
‘சுதந்திரப் பிரக்ஞை'
'ஜனகன மன’த்தில்
‘ஜெய்ஹிந்த்' அளவில்
உதட்டோர சுலோகமாய்
ஒலித்தால் போதுமா..?