பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

9


விழிக்கும் சூரியன்
படுக்கும் வரையில்,
பாரத சுவாசம்
பாரம் பரியத்தினர்
அழுத்தத் தோடே
ஆவேசத் துடனே
இயங்க வேண்டும்!
இழைய வேண்டும்!

கலையில்; தொழிலில்
கலப்பையில் எல்லாம்
எங்கும்; எதிலும்
'இந்திய ரத்தம்'
உலவிட வேண்டும்!
உயர்த்திட வேண்டும்!

விதேச சரஸ
ஆலிங்கன லீலைகளின்
அட்ட வணைகளை
மெல்ல மெல்ல
வெட்டி எறிந்தே
'நாமே நமதில்’
நிறைவது ஒன்றே
உத்தம அழகுறும்
உறுதியாம் சுதந்திரம்!