பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வ. கோ. சண்முகம்

இப்படியா பெயர்கள்
இடுவ தென்றே
கேட்பவர் உள்ளார்!
கேலிகள் செய்தே
வட்டை விட்டே
துரத்துங் களென்றே
தூற்றுவோர் உள்ளார்!

துரத்தி யடித்தும்
திரும்பியவர் நீங்கள்!
தேடாமல் வந்தீர்!
செல்வங் களானீர்!
பாடாமல் கிடக்கும்
பணிகளை உசுப்பினீர்.

பனத்தின் மேட்டில்
படுத்துப் புரளும்
குணத்தில் அழுக்குப்
பாசி பிடித்தோர்
உறவுகளாய் எம்மை
உணரவே மறுத்தக்
குறைகள் உங்களால்
குறையவே கண்டோம்!

உங்கள் உறவுகள்
எங்கள் அளவில்
தங்கப் புதையலாய்
வாய்த்தது உண்மை!