பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

25

சின்னவள் ஜூலியட்
கருப்பு உடம்பி!
இனினும் சிறிதும்
வளரவே இல்லை!
மூங்கில் பிளாச்சிபோல்
மெலிந்த கால்கள்!
ஏங்கும் விழிகள்
இரக்கும் பார்வை!
பாதாள வகுப்பில்
வாடி வதங்கும்
நாதிலாப் பாட்டாளிச்
சோதரன் போன்றவள்!

‘பஞ்சுப் பொம்மை’
போன்ற லைலா
கொஞ்சும் குரலும்
கால்வாசி தானே?
அழகும், அமைதியும்
ததும்பும் கவிதை!
பழகும் பாங்கிலும்
அவளே அரசி!
அனார்க்கலி அவளோ
அதிகாரி போன்றவள்!
தனக்கென்றே வாழும்
சீமானை நிகர்த்தவள்!

நூறுடன் ஐம்பது
தேதிகளுக் குள்ளே