இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
வ. கோ. சண்முகம்
பேறாய் உங்களைப்
பெற்ற அன்னை
நாழிகை தோறும்
நக்கி நக்கி
‘வாழும் தாய்மை’க் கோர்
வடிவம் போல
பாலைக் கொடுத்தவள்
பாசம் வளர்த்தவள்
சோலைப் புதருக்குள்
தொலைந்தே மறைந்தாள்!
பெற்றவள் உறவும்
அற்றுப் போனீர்!
மற்றவர் துணையே
வேண்டித் தவித்தீர்!
அகதி களாகவும்
அதிதி களாகவும்
புகுந்தர் எம்மனை!
புகலும், பெற்றீர்!
ஏழை எங்கள்
இளைத்த நிழலில்
வாழ வந்தே
ஒட்டிக் கொண்டீர்!
இரவல் பிள்ளைகளை
எடுத்து வந்து
‘இரவும் பகலும்’
தொட்டில்கள் ஆட்டி-