உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

27

வளர்த்துவர் நாங்கள்!
வஞ்சகம் ஒன்றே
குளுமைப் பரிசாய்
அவர்களால் கொண்டோம்!
உறவாப் வாய்த்ததும்
உணர்மை யற்றதாய்;
முறையாய் வளர்த்த
நட்புகளும் முறிந்து,

கசந்து போன -
கசங்கிப் போன -
அசந்து போன -
இதயத் துள்ளே
புதிய உறவை
பூக்கவே வைத்தீர்!

விதியின் மிச்சமோ?
விளங்கவே இல்லை!
'மிருக வாஞ்சை'யை,
'மனிதச் சூதை'
புரிய வைத்தப்
பள்ளியும் ஆனீர்!
நால்வருடனே
மூவராம் நீங்களும்
மேல்க ணக்காக
வீட்டுக் குள்ளே
வாழ்வு காணவே
தங்கி விட்டீர்!