பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

29


கன்னி


உதயங்காணாத் தாமரை நான்!
ஒளியை உமிழா வைரமும் நான்!
இதயம் எனினும் கலசமுண்டு; அதில்
இன்பமதுவோ துளியுமில்லை!

ஏற்றிவையா தீபம் நான்!
எழுதி முடியாக் காவியம் நான்!
காற்றின் செல்வத் தென்றலுண்டு - அது
கமழ்ந்து தவழ்ந்திடச் சோலை இல்லை!

மலையைத் தழுவாக் கருமுகில் நான்!
இலைகள் விரித்த பந்தியுண்டு; - அதில்
மாலை யாகா அரும்புகள் நான்!
இன்னமு தின்னும் படைக்கவில்லை!