பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வ.கோ. சண்முகம்


ஆடிப்பறக்கா இளமயில் நான்!
அணைத்து மீட்டா வீணையும் நான!
கோடித் திரவியப் பேழையுண்டு; - அதைக்
கொண்டு போகவொரு 'ஏழை' இல்லை!

முழுதும் வளராக் குளிர்பிறை நான்!
முற்றி அறுக்கா விளைச்சலும் நான்!
தொழுது வணங்கிடக் கைகளுண்டு; அவற்றின்
'துதி’யினை ஏற்கவொரு ‘தெய்வ’ மில்லை!

(1955)