இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
வ.கோ. சண்முகம்
'அத்தானே' என்றழைத்து
ஆவலுடன் ஓடிவரும்
'பித்தான நெஞ்சதுவும் போச்சோ காதல்
வித்ததுவும் கருகிமக்க லாச்சோ ?
கோலமிடும் பொழுதினிலும்
குனிந்த தலை நிமிர்வதில்லை!
ஓலமிடும் விஷ உலகின் சதியோ ? - அன்றிக்
காலமிடும் நாணமதிண் விதியோ ?
பிள்ளைச்சிறு பிராயத்திலே
பிஞ்சுமனப் பாசமெழத்
துள்ளிவந்ததே எனையணைத்துக் களித்தாள் - அக்
கள்ளியதை இன்றெங்கே ஒளித்தாள் ?
சொன்னவைகள் மறந்தாளோ ?
சொப்பனமாய்த் துறந்தாளோ ?
என்னவிதம் நானறிவேன் சிந்தை ? - அவள்
புன்னகையும் புரிவதில்லை; விந்தை !
(1959)