உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

33


திருமணம்


துடிக்கின்ற இளமைக்கும்
சுவைகேட்கும் இதழுக்கும்
‘கடிக்கும் கன்ன’ லென்று
காலம் தருவதெது ? - வாழ்வின்
முடிக்கு மணியாக - காதல்
முடிக்கும் திருமணமே!

உயிர்தேடும் முதல்இன்பம்
உளம்தேடும் நல்லுரிமை
பயிராக வளர்த் தென்றும்
பசுமை தருவதெது ? - பருவத்
துயர்போக்க அமையும்
தூய திருமணமே!