இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
வ.கோ. சண்முகம்
ஒருமையெனும் நெருப்பவித்து
உடற்பசியைத் தவிர்த்திடுமோர்
அருவிருந்தாய்இனிப் பூட்டி
அமைதி தருவதெது ? - புவியில்
ஒருவன ஒருத்தியுடன் - அன்பால்
ஒன்றும் திருமணமே!
நல்லறமாய்; உலகுய்ய
நலம்விளையும் கழனியதாய்
தொல்மறை யாம்தமிழ்க் குறளும்
சொல்லிப் புகழ்ந்ததெது? - உயர்வாம்
இல்லறமே எனவிளக்கும் - இளமை
இனபத் திருமணமே!