இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தைப்பாவாய்
35
| நோவு திர நூறு முத்தம்...! | |
|---|---|
| (கிராமியப் பாடல்) | |
| அவன்: | பொளவு கொண்டா மாரி யம்மா |
| பொளவு கொண்டா மாரி! | |
| விளுந்து விளுந்து உளைச்ச தில்லே | |
| மேலு காலு நோவுது! | |
| அவள்: | வச்ச கஞ்சி ஆறி அங்கே |
| வாளைத் தண்டாக் குளிருது! | |
| இச்சைப் பேச்சுப் பேசிக் கிடக்க | |
| இந்த நேரம் ஆவுமா ? | |
| அவன்: | கஞ்சிக் கிஞ்சிப் பேச்சை இப்போக் |
| காது கேக்க மறுக்குது! | |
| கொஞ்சிப் பேசி ரெண்டு பேரும் | |
| ருசியா இருக்கத் தோணுது! | |
| அவள்: | கையை காலே ஆட்டிக் கிட்டு |
| கண்ணை ரவையா சொளட்டுறே! | |
| பையப் பையக் கிட்டே வந்து | |
| பாயைத் தட்டிப் போடுறே! |