பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வ.கோ. சண்முகம்


அவன்: நேத்துப் பாத்தக் கூத்து வந்து
நெஞ்சு முழுக்க நிக்குது!
ராத்திரி முழுசும் நாமும் அந்த
'ராசா - ராணியா' ஆவணும்!
அவள்: மீசைக் கார மருதை மச்சான்
மிஞ்சிப்போவுது காரியம்!
ஆசை ஏறி நீயும் ஒடம்பு
அவலு அவலா இடியறே!
தலைக்கு நல்ல எண்ண தேச்சுத்
தளத ளக்கக் குளிச்சிட்டேன்!
பொளைச்சிக் கிடந்தா நாளை ராவுக்
பூவை பூச்சி மிதிக்கலாம்!
அவன்: பணத்தைக் காச மாத்திக் கொடுத்து
பாசம் வாங்க முடியுமா ?
கிணத்துத் தண்ணிக் கணக்கா நீயும்
கிடக்கக் கவலை ஏனடி?
பூவுத் தும்ப நெலவு கீளே
பூத்த மொகத்தைக் காட்டிகிட்டு
நோவு தீர நூறு முத்தம்
நொங்கு போலக் கொடுத்திடு!