பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

39


முதலைக் குளம்


'தாய் அகல மகள்' வந்தே உயிர்த்தொடரில் மீண்டும் 'தாய்மை'யினை ஏற்றருளும் நியதியதே இயற்கை!
காயகல்பம் வைத்துண்டே ஒரு ‘மகள்’தான் என்றும்
'கணினி' எனும் நிலைமாறா எழில்மினுக்கி நின்றால்
தூயபெரும் பரிணாமம் உயிர்த்தொகையில் உண்டா?
துளிரின்றி, முகையின்றி ‘பழுப்புகளே’ வாழும்
நியாயத்தைப் புல்பூணிடு தருஇனத்தில் கூட
நாம்காணும் முறைமைஇலை; கொடுமைஇலை! மெய்யே!

பாடாத புதுக்குயில்கள் பாடுவதற்கு வந்தால்
பருவத்து வசந்தந்தான் வெறுப்பதுவும் உண்டோ ?
ஆடாத கவின்மயில்கள் ஆடுதற்கு வந்தால்
ஆகாயக் கருமுகில்கள் அகன்றோடல் உண்டோ ?
மேடாகப் புகழ், செல்வம் குவித்துவிட்ட பின்னும்
மிச்சமின்ற சுகபோகம் துய்ந்துவிட்ட பின்னும்,
'காடாக’க் கலைத்துறையை ஆக்கிச் சில பேரே
கரடி, புவி சிங்கமென உலவிடுதல் நன்றோ?