பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

43


படி உடைந்த ஏணியோ?-புனல்
பாழ்த்ததொரு கேணியோ?
முடிவடையும் கதையதோ? - ஆண்டை
மூட வரும்‘பங்குனி’

படை இழந்த வீரமோ? - அருட்
பதமிழந்த ஈரமோ?
விடை கொடுக்கும் கரங்களோ? . குளிர்
விசையொடுங்கும் 'பங்குனி’!

ஆண்டிரண்டின் பாலமோ? - வசந்த
அழகுவரும் சாலையோ?
தூண்டிடாத தீபமோ? - புதிர்
சொல்ல வரும் 'பங்குனி’!

கதிர் அறுத்த வயலதோ? - வெளிக்
காற்றிளைத்தப் புயல்தோ?
சதிர் நிறுத்திய கால்களோ? - ஒரு
தாய் நிகர்த்தப் 'பங்குனி'!