பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

49

நீ சஞ்சீவி!
அறிவு நோய்களின்
அற்புத நிவாரணி
தாய் வாஞ்சைபோன்ற
தேனையும் விட
நாட்பட நாட்பட
நீ - ‘நீ’ யாகவே,
அமரத்துவத்துடன் இருக்கும்போது
கால விஷம்
உன்னைக் கடிக்கவே நடுங்குகிறதே!

நீ - ‘நீ’யாகவே-
நகலற்ற போலியற்ற-
மாற்றமற்ற-
உரு - உதிர
ஜீவமூச்சோடு,
உலவும்போது தன்பரிசாகக்
கடவுள்
தனி ஆயுளை
உனக்குத் தந்து மகிழ்கிறான்!

நீ - நீயாகவே
வீரமிடும் போது
'சத்திய’மும்
'தர்ம’மும்
உன் இரும்புக் கரங்களாகின்றன!