பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

51

கனக புஷ்பங்களாக -
கால நட்சத்திரங்களாக
ஆகிவிடுகின்றனவே!
உன்
தொண்டின் தொடர்ச்சியில்
இது
ஒரு சூட்சமம்!

விக்ரக அழகுகளின்
நீ -
விளையாடும் லீலைகளைவிட
விலகும் அழகுகளில் -
வெறும் இருட்டுப் பரப்பில்
ரூபக் கோணல்களில் கூடத்
தூய்மையான ஆத்மாவின்
துலகரீகரமாக
நீ வடிவெடுப்பது
எனக்கு மட்டும்
எப்படியோ தெரிகிறதே
என்ன விந்தை இது..?

ஏனோ
'உதய’ங்களில்
உறைவதை விட
‘அஸ்தமன’ங்களில்
அமர்ந்திருப்பதை
நீ எப்போதுமே
அதிகமாக விரும்புகிறாய்.