பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வ. கோ. சண்முகம்

அதுவும் சரிதான்!
ஏன் என்றால்
நீ எப்போதுமே
அவலக் கண்ணீரின்
ஆசைத் தோழி!
வெப்பமூச்சுகளின்
அந்தரங்க உபகாரி!

நீ,
தத்துவங்களின்
பாடிவீடு!
நழுவிக் கொண்டவர்களின்
மாடிவிடு!

நீ-
சுயரூபி அல்ல!
சாகும் வரை இருக்கும்.
சலித்து அலுத்துப் போகும்.
ஒற்றை ஒரு
உருவினளாகவே
இல்லாத
‘இஷ்ட ரூபி!’ இது -
நீ பெற்ற
ஈடு இணையற்ற மகாவரம்!

இந்த வரம்
அமர வர்கத்தினர்
தெய்வ வீடுகளில்