பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வ. கோ. சண்முகம்


சதுர மூலைக்
கால்களாக ஆக்கும் அளவுக்கு
அதிகாரம் படைத்த
ஆணவக் காரியுங்கூட!

இந்த ஆணவம் இருக்கிறதே,
இதுதானடி,
எனது
ஏக மொத்த பலம்!
எதிர்த்தசைக்க முடியாத
அன்னியம!
எதனையும்
எனினளவில்
‘பலவீன’மாக்கிப் பார்க்கும்
மந்திரக்கோல்!

எண்னைப் பொறுத்தவரை
உன்னைவிடப்
பெரிய
விருந்தாளி
வேறுயாருமே இல்லை!
ஆனால்-
இதிலும் ஒரு அதிசயமடி
ஆமாம்
விருந்தாட வரும்
நீதான்
விட்டுக்காரனான
எனக்கு