பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.பதிப்புரை


ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியப் பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டு தலை நிமிர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறது, 'செம்மொழி’ தமிழ் !

திருக்குறளுக்கு இணையாக, ஒட்டுமொத்த மானுட சமூகத்துக்கும் வாய்ந்த அறநூல் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை என்கின்றனர் மொழியில் ஆய்வாளர்கள்.

'சங்க இலக்கியம்’ போன்ற செறிவான - தொன்மையான படைப்புத் தொகுப்பு, உலகின் எந்தமொழிக்கும் கிடைக்காத பெரும் பேறு எண்ணிப் பளகாங்கிதம் அடைகின்றனர் நம் தமிழ்ச் சான்றோர்!