பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்கடிகை அக்காரக்கனி

83

நம்மைப்போல் வினை காரணமாகப் பிறக்குந் தன்மையில்லாதவர் என்பதைக் குறிக்கின்றது. ஆனால், அடியார்களின் பொருட்டுப் பல பிறப்புக்களை மேற்கொள்பவராதலின் ‘பல்பிறவிப் பெருமான்’ என்று குறிப்பிடப் பெறுகின்றார். அவரை அங்ஙனம் பிறக்கும்படிச் செய்த தலைவர் ஒருவரும் இல்லை என்பது ஈண்டு அறியத்தக்கது. இக்கருத்தினை,

“முதன்முறை இடைமுறை
     கடைமுறைத் தொழிலில்
பிறவாப் பிறப்பிலை
     பிறப்பித்தோர் இலையே”[1]

என்ற பரிபாடல் பகுதி தெளிவாக விளக்கி நின்கின்றது.

எம்பெருமான் அடியார்களின் பொருட்டு எடுத்த அவதாரங்களுள் நரசிம்மாவதாரம் பார்ப்பவர்களின் உள்ளங்களில் அச்சத்தை விளைவிக்க வல்லது. மனித உடலும் சிங்க முகமும் கொண்ட உருவ மாதலின் அவ்வுருவம் கண்டவரை யெல்லாம் அஞ்சும்படி செய்கின்றது. இந்த அவதாரம் ‘பரம்பொருள் எங்கும் உளன்’ என்ற தத்துவத்தை விளக்கி நிற்கின்றது.

“எங்கும் உளன்கண்ணன்’
     என்றமக னைக்காய்ந்து
‘இங்கில்லை யால்’என்(று)
     இரணியன் தூண்புடைப்ப
அங்(கு)அப் பொழுதே
     அவன்வீயத் தோன்றிய,என்
சிங்கப் பிரான்பெருமை
     ஆராயும் சீர்மைத்தே.”[2]

(கண்ணன் - இறைவன்; மகன் - பிரகலாதன், காய்ந்து - கோபித்து, புடைப்ப - அறைய; விய - இறக்க: சீர்மைத்தே - தன்மையதோ?)

என்பது நம்மாழ்வாரின் பாசுரம். இதில் இத்தத்துவத்தின் விளக்கத்தைக் காணலாம். இந்தச் சிங்கப்பிரான் பிறந்த காட்சியைக் கம்பன் மிக அழகாகக் காட்டுகின்றான்.

  1. பரிபாடல் . 3, அடி. 71-72
  2. திருவாய் - 2.8:9