பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

நசைதிறந்(து) இலங்கப் பொங்கி நன்றுநன்(று) என்ன நக்கு விசைதிறந்(து) உருமு வீழ்ந்த(து) என்னவே தூணின் வென்றி இசைதிறந்(து) உயர்ந்த கையால்

எற்றினன்; எற்ற லோடும் திசைதிறந்(து) அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்.

த8

(நசை, இலக்கணையால் பரிகாசக் கருத்து என்று பொருளது. நசை - விருப்பம் (பிரகலாதனது பேச்சைச் சோதிப்பது); நக்கு - சிரித்து; விசை - வேகம்; உருமு - இடி, இசை - புகழ்; எற்றினன் - அறைந்தான்; திசை - திக்கு: செங்கண் - சிவந்த கண்களையுடைய) என்ற பாடலில் இதனைக் காண்க. சிங்கப்பிரான் சிரித்த காட்சியே நம்மைத் துணுக்குறச் செய்கின்றது. அப்பெருமான் கொண்ட பேருருவம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை.

அச்சத்தரும் இந்த நரசிம்ம மூர்த்தியைச் சாந்த மூர்த்தியாகவும் கண்டு களிக்க அவாவுற்றனர் கலைஞர்கள். ஆகவே, அவர்கள் பெரிய பிராட்டியாரை நரசிம்மனது மடியில் இருத்தி இலக்குமி-நரசிம்மனாகக் கண்டு மகிழ்ந்துள்ளனர். யோக நிலையில் இருந்து கொண்டு எப்பொழுதும் மக்களுக்கு அருள் புரியும் நிலையில் அவனைக் காணவும் ஆசைப்பட்டனர். அந்த ஆசை தீர அவனை யோக நரசிம்மனாகப் படைத்து, சாந்த நிலையில் கண்டு களித்துள்ளனர். இந்தச் சாந்த நிலையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசமே சோழ சிங்கபுரம் என்பது. இந்தச் சோழசிங்கபுரமே ‘சோளங்கிபுரம்’ என்றும், ‘சோளிங்கர்’ என்றும் வழங்கி வருகின்றது. இது வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருத்தணி-சித்துர் நெடுஞ்சாலையில் திருத்தணியிலிருந்து சுமார் இருபது கல் தொலைவிலுள்ள ஒர் அழகான பெரிய ஊராகும்.

பண்டைக் காலத்தில் இவ்வூருக்கு வழங்கி வந்த பெயர் ‘கடிகாசலம்’ என்பது. “கடிகை என்றே ஆழ்வார்கள் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். ‘கடிகை’ என்ற சொல்லுக்கு ‘நாழிகை என்பது பொருள். பிரகலாதனுடைய மகிழ்ச்சியின் பொருட்டு ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் யோக நிலையில்

6. கம்பரா. யுத்தகாண் - இரணியன் வதைப் - 127.