பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடிகை அக்காரக் கனி 85

நரசிம்மன் தோன்றிய காரணத்தால் இது கடிகாசலம்’ என்ற பெயரால் வழங்கி வருவதாகக் கூறுவர் பெரியோர். நாம் ஒரு நாழிகைக் காலம் இத்தலத்தில் தங்கியிருந்தாலும் நமக்கு முக்தி கிடைக்கும் என்பதாகச் செவி வழிச்செய்தியால் அறிகின்றோம். இதனால் இத்தலத்திற்குக் ‘கடிகை என்ற திருநாமமும் வழங்கலா யிற்று என்றும் அவர்கள் கூறுவர்.

முதல் நாள் திருத்தணி முருகனைச் சேவித்த நாம் மறுநாள் அதிகாலையில் நன்னிராடித் துய ஆடைகளை அணிந்து கொண்டு இத்தலத்திற்குப் புறப்பட ஆயத்தமாகின்றோம். இஃது அரக்கோணம், சித்துர், திருத்தணி முதலியவற்றின் நடுவில் அமைந்து தமிழகத்தின் தற்போதைய வடஎல்லையாக உள்ளது. திருத்தணியிலிருந்து இவ்வூருக்குப் பேருந்து வசதி உண்டு. அதிகாலையில் ஐந்தரை மணிக்குப் பேருந்து நிலையத்திற்கு வந்து வண்டி ஏறுகின்றோம். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் பேருந்து சோழசிங்கபுரத்தை அடைகின்றது. சோழநாட்டைப் போலவே தொண்டை நாட்டிடையில் நரசிங்கப் பெருமான் தங்குவதற்குச் சிறந்த இடமாக இருப்பதனால் இவ்வூர் ‘சோழசிங்கபுரம்’ என்று பெயர் பெற்றது என்பர் ஒருசாரார். பிற்காலச் சோழமன்னர்களில் ஒருவன் இங்குச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து கோயில் ஒன்றை எழுப்பியதால் இவ்வூர் ‘சோழலிங்கபுரம்'என்று வழங்கலாயிற்று என்றும், அப்பெயரே நாளடைவில் ‘சோழசிங்கபுரம்’ என்று திரிபடைந்தது என்றும் கூறுவர் பிறிதொருசாரார். ஊரின் நடுவிலேயுள்ள சிவாலயம் ஒன்றை இதற்குச் சான்றாகவும் காட்டுவர் இவர்கள். எனினும், இன்று நரசிம்மமூர்த்தியே பெரும்புகழ் பெற்றிருப்பதனால், நாம் இத்தலம் ‘சோழசிங்கபுரம்’ என்று வழங்குவதையே சிறப்பாகக் கொள்வோம்.

சங்ககாலத்தில் தமிழகத்தில் சோழநாட்டை ஆண்டு வந்தவன் கரிகாற் பெருவளத்தான் என்று வழங்கப்பெறும் கரிகாற்சோழன்; ‘பட்டினப்பாலை’ என்றும் பாட்டின் பாட்டுடைத் தலைவன். இவனுடைய காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்றும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவன் சோழவள நாட்டை 48 கோட்டங்களாகப் பிரித்தான் என்றும், அவற்றுள் கடிகையைய் சேர்ந்த பகுதி முழுவதும் கடிகைக் கோட்டம் என்று வழங்கப்பெற்றது என்றும் அறிகின்றோம். பல்லவர்கள் காலத்தில் (கி.பி.650-750) இப்பகுதி