பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடிகை அக்காரக் கனி 87

தமிழும் கலந்து நிலவும் பகுதியாதலால் ‘மலை என்று பொருள்படும் ‘கொண்ட’ என்றதெலுங்குச் சொல்லும், ‘பாளையம்’ என்ற தமிழ்ச் சொல்லும் காதல் மணம் பூண்டு ஊர்ப்பெயராக அமைந்து கிடக்கின்றது. கொண்ட பாளையத்தில்” தேவஸ்தான ஆட்சிப் பொறுப்பிலுள்ள ராயாஜி அன்னதானச் சத்திரத்தில் தங்கி ஒருமைல் தொலைவிற்குமேல் வழிநடந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றோம்.

கொண்டபாளையத்திலிருந்து மலையை அண்ணாந்து நோக்கினால் ‘இந்த மலையில் எப்படி ஏறுவது?’ என்ற பிரமிப்பு முதலில் எவருக்கும் ஏற்படுவது இயல்பு. திருக்கோயில் அமைந்திருக்கும் மலை அதிக உயரமானதாக இல்லாவிடினும் அதற்கு முன்புறமாக நீண்டுவளர்ந்து நிமிர்ந்து நிற்கும் இன்னொரு மலைதான் இந்த ‘மலைப்பை உண்டாக்கும். இம் மலையைப் பற்றி அப்பகுதி மக்களிடம் ஒரு செவி வழிச் செய்தி நிலவி வருகின்றது. பைரவர் என்ற முனிவர் ஆணையின்படி இக்குன்று வளர்ந்து கொண்டே போயிற்றென்றும், அதன் வளர்ச்சி தேவ லோகத்தையே முட்டிவிடும் என்று எண்ணிய தேவேந்திரன் பலராமனைக்கொண்டு அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தினான் என்றும், அதனால் தான் அது அம்மட்டோடு நின்று விட்டதென்றும் கூறுகின்றனர். உடல்நிலை காரணமாக மலைமேல் ஏறுவதற்கு மலைப்புத்தட்டுபவர்கட்கு ‘டோலி வசதி செய்யப் பெற்றுள்ளது. ஏழு வெண் பொற்காசுகள் தந்தால் எளிதாக மலை உச்சியை அடைந்து திரும்பலாம்.

யோக நரசிம்மனது திருக்கோயில் சற்றேறக்குறைய நானுறு அடி உயரமுள்ள ஒரு மலைமீதுள்ளது. இது ‘பெரியமலை’ என்று வழங்கப்பெறுகின்றது. எந்தத் திக்கிலிருந்து கோயிலை நெருங்கினாலும் கோயிலும் மலையும் பத்து மைல் தூரம் கண்ணுக்குத் தட்டுப்படும். முதன் முதலாக ராயாஜி என்பாரால் மலைமேலுள்ள கோயிலுக்குப் படிக்கட்டுகள் அமைக்கப் பெற்றன என்று அறிகின்றோம். இப்படிக்கட்டுகள் மிகவும் கரடுமுரடாக இருந்தனவாதலால் இன்று பல அன்பர்களின் நன்கொடையினால் அகலமான புதிய படிகள் கட்டப் பெற்றுள்ளன. மலை ஏறுபவர்கட்கு அதிகக் களைப்பும் சோர்வும் ஏற்படாதிருக்கும் பொருட்டு இவற்றைச் சுற்றி வளைத்துக்

8. கொண்ட பாளையத்தில் தனியார் பொறுப்பில் 29 சத்திரங்கள் உள்ளன.