பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

திரளாகவந்து வழிபாடு நடத்துவர். அப்போது ஊரும் குன்றுகளும் திருக்கோவில்களும் எழிலுடன் திகழும். ஆஞ்சநே யருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இவர் கோயிலில் படுத்து உறங்கினால் நற்கனவுகள் தோன்றும் என்றும், அவை பலிக்கும் என்றும் சொல்லுகின்றனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சோழசிங்கபுரம் ஒரு போர்க்களமாக இருந்ததாகவும் அறிகின்றோம். கி.பி.1781-இல் ஆங்கிலேயருக்கும் மைசூரை ஆண்ட ஐதர் அலிக்கும் ஏற்பட்ட இரண்டாம் கர்நாடகப் போர் இவ்வூரின் தென்பகுதியில் நடைபெற்றது. கூட் (Coote) என்ற படைத்தலைவன் தலைமையில் ஆங்கிலப் படையும் ஐதர் அலியின் படையும் கை கலந்தன என்றும் கூறப்பெறுகின்றது. போரில் மாண்ட முகம்மதிய சேனை வீரர்களின் சமாதி (கல்லறை) ஒன்று திருக்குளத்தின் (சீநிவாச புஷ்கரணி) எதிரில் இன்றும் காணப்பெறுகின்றது. இவர்களது நினைவுச் சின்னங்கள் g)cing of gygiromeo,61soremifusso (Sub-Registrar’s Office) flairp வண்ணம் காட்சியளிக்கின்றன.

இந்தத்தலம் இரண்டு ஆசாரியர்கள் வாழ்ந்து திகழ்ந்த இடமாகும். மணவாள மாமுனிகளின் முக்கிய சீடர் எறும்பியப்பா என்பவர். இவர் இத்தலத்துக்குச் சுமார் 2 கல் தொலைவிலுள்ள எறும்பி என்ற ஊரில் பிறந்தவர். வரதாச்சாரியர் என்பது இவரது திருநாமம். அக்காலத்து மக்கள் இவரை ‘அப்பா’ என்றே அழைப்பது வழக்கம். ஆதலால் இவர் பிறந்த எறும்பி என்ற ஊரின் பெயரையும் சேர்த்து ‘எறும்பி யப்பா’ என்று வழங்கலாயினர். அவர் இத்தலத்து எம்பெருமானுக்குக் கைங்கரியம் புரிந்துள்ளார். இவர் கடிகை எம்பெருமானைக் குறித்து ‘அமிர்த பலாவளி சதகம்’ என்ற இனிய நூலை வடமொழியில் அருளியுள்ளார். இவர் பெயரால் நிறுவப் @Logistrm “arguibl 5 opposogou 13&st (Erumbi Special Trust) கட்டளையொன்றால் பங்குனி உத்தரதன்று ஹனுமத் ஜயந்தி’ என்று உற்சவம் நடைபெற்று வருகின்றது.

இத்தலத்து எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்த இரண்டாவது ஆசாரியர் தொட்டையாச்சாரியர் என்பவர். இராமாநுசர் தாம் நிறுவிய வைணவக் கோட்பாடுகள் இந்நிலவு லகம் முழுவதும் தழைத்தோங்க நியமித்தருளிய 74 சிம்மாசனாதி