பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடிகை அக்காரக் கனி 93

பதிகளில் முதல்வர் முதலியாண்டான் என்பதை நாம் அறிவோம். அவருடைய திருக்குமாரர் கந்தாடையாண்டான் என்பவர். அவரது வழித்தோன்றல்களில் பத்தாம் தலை முறையில் வந்தவர் கந்தாடை தேவராசாசார்யர். அவரது திருக்குமாரர் குமாரபெரியப் பங்கார் என்பவர். இவரது மகனாரே சுவாமி தொட்டையாச் சாரியர். 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பல வடமொழி நூல்களை அருளியுள்ளார். இவர் காஞ்சி வரதராசப் பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டவர். இவர் வையம் கண்ட கச்சித் திருநாள்’ என்று பெரும்புகழ் பெற்ற காஞ்சி தேவப்பெருமாள் வைகாசித் திருநாளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தவறாது எழுந்தருளுவது வழக்கம். ஒரு முறை திருமேனி பாங்கில்லாமையால் அங்குச் செல்ல முடியவில்லை. மூன்றாம் திருநாள் காலையில் காஞ்சி எம்பெருமானின் கருடசேவையை மனத்தில் எண்ணியவாறு தக்கான் குளக்கரையில் நித்திய கர்மாநுஷ்டானம் செய்த வண்ணம் வரதராசனை ஐந்து சுலோகங்கள் கொண்ட ‘தேவராஜ பஞ்சகம்’ மூலம் துதித்துத் தம் ஆற்றாமையை வெளியிட்டார் என்றும், அவரது பக்தியை உவந்தருளிய எம்பெருமான் கருடன்மீது அவருக்குக் காட்சி அளித்தான் என்றும் வரலாறு ஒன்று உண்டு.

இவ்வரலாற்றின் நினைவாக இன்றும் காஞ்சி வைகாசித் திருநாள் கருடசேவையின்பொழுது தேவப்பெருமாள் கோபுர வாயிலில் சிறிது தாமதித்து நின்று கர்ப்பூர ஆரத்தி பெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இது சோழசிம்மபுரம் தொட்டையாச்சாரியருக்கு எம்பெருமான் கருடவாகனத்தி லிருந்து கொண்டு சேவை சாதிப்பதன் அறிகுறியாகும். இதே அறிகுறியாகத் தக்கான் குளக்கரையில் தேவப்பெருமாள் கருடவாகனராய்ச் சேவை சாதிப்பதை இன்றும் காணலாம். மேலும், காஞ்சியில் கருடசேவை நடைபெறும் அதே நேரத்தில் தக்கானுக்கும் கருடசேவை புறப்பாடு நடைபெறுகின்றது. அப்பொழுது தொட்டையாசாரிய சுவாமிக்குத் திருப்பரிவட்டம், திருமாலை, சடகோபன் முதலியன சாதிக்கப்பெற்று மங்களா சாசனப் புறப்பாடும் நடைபெற்று வருகின்றது.

இங்ஙனம் பல்வேறு செய்திகளை அறிந்த வண்ணம் யோக நிலையிலுள்ள இருமூர்த்திகளிடம் கொண்ட பக்திப் பெருக்குடன் இத்தல யாத்திரையை நிறைவு செய்கின்றோம்.