பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. எவ்வுள் கிடக்கும் பெருமலை

“தேன்.உடைக் கமலத்து அயனொடு தேவர்

சென்று சென்று இறைஞ்சிட, பெருகு வானிடை முதுநீர்க கங்கையின் கரைமேல்”

(கமலம்-தாமரை, அயன் நான்முகன்)

இருப்பது வதரிகாச்சிரமம். இங்ஙனம் திருமங்கையாழ்வரால் சிறப்பிக்கப்பெற்ற திருவதரிகாச்சிரமத்தில் சாலி ஹோத்ரர் என்ற மாமுனிவர் ஒருவர் இருந்தார். நீண்ட காலம் மகப்பேறு இன்றி இருந்த இவருடைய பெற்றோர்கட்குச் சாலியாகத்தின் பயனால் பிறந்தவராதலால் இவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. சாலி என்பது சம்பாநெல். ஒரு ஹோமத்திற்கு இருபத்தெட்டு சாலி நெற்கள் வீதம் நாளொன்றுக்கு ஆயிரம் ஹோமம் செய்வதாயும், இப்படி ஒராண்டு அனுட்டிப்பதாகவும் சங்கற்பித்துக் கொண்டு செய்யப்பெற்ற ஹோமத்தின் பயனாகப் பிறந்தவர் இந்த முனிபுங்கவர்.

ஒரு சமயம் இம்முனிவர் மோட்சத்தை அடைய விருப்ப முடையவராகத் தவம் செய்ய உறுதி கொண்டு வீகூடிாரண் யத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த நாள் தை அமாவாசை. அன்று மாலை அங்குள்ள ஹ்ருத்தாபநாசன தீர்த்தத்தில் (மனநோய் தீர்க்கும் தீர்த்தம்) நீராடி ஒராண்டுக் காலம் பட்டினி கிடந்து மெளனத்துடன் தவம் செய்யவேண்டும் என்று சங்கற்பித்துக் கொண்டு தவத்தைத் தொடங்கினார் தீர்த்தத்தின் வடகரையில். நீண்ட நாள் உணவின்றி இருந்தாமையால் அவருடைய உடலும் மிகவும் இளைத்தது. அடுத்த தைஅமாவா சையும் வந்தது. அன்று அதிகாலை தொடங்கி பொறுக்கிச் சேர்த்த நெல்லை மூன்று பிடி அரிசியாக்கினார்; ஓராண்டுக் காலமாக

1. பெரி. திரு. 1.4:2. 2. இந்த வனத்தில் உலக இன்பத்தில் மண்டியிருக்கும் மனிதர்களுடைய ஊனக்கண்ணாலும் (மாமிஸ் சrஸ்ை) பகவான் எளிதாகப் பார்க்கப்படுவதால் ‘வீகூடிாரண்யம்’ எனப்பெயர் பெற்றது; எம்பெருமானுடையதரிசனத்தைக்தரும் வனம் என்பது இதன் பொருள்.