பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

அனுட்டித்துவரும் மெளன விரதத்தையும் உபவாசத்தையும் அன்றுடன் நிறைவு செய்ய நினைத்தார். மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனி இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு அரிசியைச் சோறாக்கினார். அந்தச் சோற்றை ஆண்டவனுக்குப் படைத்து அதனை நான்கு கூறுகளாக்கி ஒரு கூறினை அதிதிக்காக வைத்து அதிதியை எதிர்நோக்கிய வண்ணம் காத்திருந்தார்.

அந்தச் சமயத்தில் எம்பெருமான் வயது முதிர்ந்த அந்தணர் வடிவங்கொண்டு, இடக்கையில் தண்டம், குடை இவற்றுடனும், வலக்கையில் கமண்டலத்துடனும், செருப்புக்காலுடனும் நீண்ட தூரம் பயணம் செய்து வருவதால் பசியினாலும் நீர்விடாயாலும் களைப்புற்ற நிலையில் தள்ளாடித் தள்ளாடி நடந்துவந்து கொண்டிருந்தார். அந்தத் கோலத்தில் வரும் அதிதியைக் கண்ட முனிவர் தரித்திரன் தனத்தைக் கண்டதைப்போல் களிப்புற்றார். அதிதியை முறைப்படி வணங்கி அவருக்கு அர்க்கியம், பாத்யம், ஆசமனியங்கள் சமர்ப்பித்து நன்கு ஆராதித்து அவருடைய திருவடி கழுவிய தீர்த்தத்தை உண்டு அவரைக் கிழக்கு முகமாக வீற்றிருக்கச் செய்து அதிதியின் கூறான உணவை அவருக்கு இட்டார். கிழவரும் அதனை விரைவில் உண்டு மேலும் தேவையுள்ளவர்போல் காணப்பட்டார். முனிவரும் மூன்று கூறுகளையும் ஒவ்வொன்றாகப் படைத்தார். நான்காவது பகுதியை உண்டபின்னர்தான் பசியடங்கி மனநிறைவு கொண்டார் அதிதி.

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டல்லவா? ஆகவே, வந்த அதிதி ‘முனிவரே, எவ்வுள்ளில் (எந்த இடத்தில்) இளைப்புத் தீர நாம் உறங்கலாம்? அந்த இடத்தைக் காட்டும்’ என்று கேட்டார். முனிவர் தம்முடைய பர்னசாலையைக் காட்டி ‘இந்த உள்ளிலே திருக்கண் வளர்ந்தருள்க. அடியேன் தேவரீரின் அருகிலிருந்துகொண்டு திருக்கரத்தைப் பிடித்திடுகின்றேன்’ என்று விண்ணப்பித்து அவருடைய அருகில் அமர்ந்தார். அதிதியோ சயனித்துக் கொள்வதற்குத் தெற்குப் பக்கம் தலையைச் சாய்த்தார். கனநேரத்திற்குள் எம்பெருமான் முனிவருக்குத் தமது அசாதாரணமான திவ்விய மங்கள உருவத்தைக் காட்டி அவர் கோரிய சாயுச்சிய பதவியையும் அவருக்கு அளித்தார். அன்று முனிவருக்குக் காட்சி அளித்த அதே நிலையில் இன்றளவும் சயனித்துக் கிடக்கின்றார். நம் போலியருக்கும் சேவை சாதித் தருளுகின்றார். எம்பெருமான்