பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வுள் கிடக்கும் பெருமலை 97

‘தாம் சயனித்துக் கொள்ள வேண்டிய உள் எவ்வுள்?’ என்று வினவ, முனிவரும் இவ்வுள்ளிலேயே திருக்கண் வளர்ந்தருள்க’ என்று விண்ணப்பிக்க, எம்பெருமானும் அவ்விடத்தில் சயனித்துக் கிடந்தமையால் எம்பெருமானுக்கு ‘எவ்வுள் கிடந்தான்’ என்று திருநாமம் வழங்கலாயிற்று. திருமங்கையாழ் வாரும் ‘எவ்வுள் கிடந்தான்’ என்றும், ‘எவ்வுள் பெருமலை” என்றும் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசைபிரானும்,

“நாகத்தனைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத்தனை அரங்கம் பேர் அன்பில்’

என்று நாகத்தனைமேல் பள்ளிகொண்டிருக்கும் தலங்களாகக் கும்பகோணம், காஞ்சி சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், திருவரங்கம், திருப்பேர் நகர் (கோவிலடி), அன்பில் முதலான இடங்களைக் குறிப்பிடுங்கால் திரு எவ்வுள்ளையும் சுட்டியுரைக்கின்றார்.

அந்தத் திரு எவ்வுள்’ என்ற திவ்விய தேசத்திற்கு இன்று நாம் புறப்படுகின்றோம். ‘திரு எவ்வுள்ளுர்’ என்று அன்று பெயர் பெற்ற தலம் இன்று திருவெள்ளுர் என்ற பெயரால் வழங்கி வருகின்றது. ‘திரு எவ்வுள்ளுர்’ என்ற பெயர் . மருவி ‘திருவெள்ளுர்’ எனத் திரிந்து வழங்கி வந்திருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. தொண்டை நாட்டுத் திருப்பதிகள் இருபத் திரண்டில் இதுவும் ஒன்று. இது சென்னைக்கு வடமேற்கில் 30 கல் தொலைவில் உள்ளது. சென்னை அரக்கோணம் தென்னிந்திய இருப்பூர்தி வழியில் திருவெள்ளுர் நிலையத்திலிருந்து இரண்டு கல் தூரத்தில் உள்ளது. நிலையத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. குதிரை வண்டி, மாட்டு வண்டிகளும் கிடைக்கும். சென்னையிலிருந்து பேருந்து மூலம் இவ்வூரை அடையலாம்; இருப்பூர்திப் பயணம் செய்தும் இவ்வூருக்குப் போகலாம். நாம் பேருந்து மூலமே இவ்வூருக்கு வருகின்றோம்.

பேருந்தில் வந்து கொண்டிருக்கும்போதே ஆழ்வார்களின் பாசுரங்கள் நம் சிந்தையில் குமிழியிடத் தொடங்குகின்றன. முதலில் திருவெள்ளுருக்கு அருகில் சென்னைக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள திருமழிசை என்ற ஊரில் திருவரித்த

3. பெரி. திரு -2 4. பெரி. திருமடல் - கணின. 116. 5. நான். திருவந் - 36, தொ.நா-7