பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

‘பக்திசாரர்’ என வழங்கும் திருமழிசையாழ்வாரின் பாசுரம் நம் நினைவுக்கு வருகின்றது.

“நாகத்(து) அணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத்(து) அணை அரங்கம் பேர்அன்பில் - நாகத்(து) அணைப்ாபற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தன் ஆவான்.”

(நாகம்-ஆதிசேடன், குடந்தை-கும்பகோணம், வெஃகா-யதோக்தகாரி சந்நிதி

(காஞ்சி அரங்கம்-திருஅரங்கம்: பேர்-திருப்பேர் நகர் அன்பில், இலாலுகுடிக்கு அருகிலுள்ளது. ஆதிநெடுமால்-சர்வேசுவரன்; அணைப்பார்-அன்பர்)

திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுள்ளுர், திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய இடங்களில் அரவணைமிது கிடந்தருள்வது அன்பர்களுடைய இதயத்தில் புகுவதற்காகவே என்று காரணங் கற்பிக்கின்றார் ஆழ்வார். எப்பொழுதும் எம்பெருமானுடன் அணைந்தேயிருக்கவேண்டு மென்று ஆசையுடையவர்கள் அணைப்பார்’ எனப்படுவார்கள். அவர்களுடைய திருவுள்ளத்திலே பொருந்தின வனாக ஆவதற் காகவே இருக்கும் எம்பெருமான் ‘கருத்தன் ஆவான்’ என்று சுட்டப்பெறுகின்றான்.

இவ்விடத்தில் பிள்ளை உலகாசிரியரின் இன்சுவை மிக்க சூத்திரங்களையும் நினைந்து போற்றுகின்றோம்.

“ திருமாலிருஞ் சோலைமலையே என்கிறபடியே, உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைக தேசத்திலே பண்ணும்”

என்பது ஒரு சூத்திரம். ‘தெற்குத் திருமலையையும் திருப்பாற் கடலையும் என் தலையையும் ஒக்க விரும்பா நின்றான்; ஸ்ரீ வைகுண்டத்தையும் திருவேங்கடத்தையும் என் சரீரத்தையும் ஒக்க விரும்பா நின்றான் என்றாரிறே ஆழ்வார்; இப்படி, ஒரோர் அவயவத்திலே இரண்டு இரண்டு திருப்பதிகளிலே பண்ணும் விருப்பத்தைப் பண்ணினான் என்ற இது எல்லாத் திருப்பதி களிலும் பண்ணிய விருப்பத்தை ஒரோர் அவயவத்திலே பண்ணி நின்றான் என்னுமதற்கும் உபலட்சணம்’ என்ற அதன் உரைப்பகுதியையும் சுவைக்கின்றோம். மேலும்,

6. நான். திருவந் - 36. 7. நீ வச. பூஷ - 174 (புருடோத்தம நாயுடு பதிப்பு)