பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வுள் கிடக்கும் பெருமலை 99

“அங்குத்தை வாசம் சாதனம்;

இங்குத்தை வாசம் சாத்தியம்’

(அங்குத்தை-அவ்விடத்தில்; சாதனம்-பயனை அடைதற்குத் துணையாக

இருப்பது; இங்குத்தை-இவ்விடம்; சாத்தியம்-அதனால் அடையும் பயன்)

என்ற மற்றொரு சூத்திரத்தையும் நினைக்கின்றோம். உகந் தருளின் நிலங்களிலே எம்பெருமான் விரும்பி வசிப்பது தக்க உபாயங்களாலே மக்களை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு; இம் மக்கள் திருந்த இவர்கள் மனங்களிலே தான் வசிக்கப்பெற்றது அந்தத் திவ்விய தேசங்களிலே நின்று பண்ணின கிருவழியின் பலன் ஆகும். ஆகவே, திவ்விய தேசங்களின் வாசம் உபாயமாகவும், பக்தர்களுடைய இதயத்தின் வாசமே புருஷார்த்தமாகவும் (பயனாவும்) இருக்கும் என்றும், இது கிடைத்துவிட்டால் எம்பெருமானுக்குத் திவ்விய தேசவாசத்தில் விருப்பம் குறைந்துவிடும் என்றும் பெறவைக்கும் இன்சுவை மிக்க சூத்திரத்தின் பொருளையும் எண்ணி மகிழ்கின்றோம். அதற்கு ‘நாகத்தனைக் குடந்தை’ என்ற பாசுரத்தையும் மூலமாகக் கொண்டதாகும். ‘மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை’ என்று நம்மாழ்வார் கூறுவதும் இச்சாதன - சாத்தியத்தைக் குறித்ததேயாகும். இக்கருத்துகள் எழும் நிலையில் பேருந்து திருமழிசையை வந்து அடைகின்றது. ஆழ்வார் பிறந்த ஊருக்கு வரும் பேறு கிடைத்தமைக்கு மகிழ்கின்றோம்; அவ்வூர்திருக்கோயில் கோபுரத்தைக் கண்டு ஒரு ‘கும்பிடு’ போடுகின்றோம்.

திருமழிசையைப் பேருந்து கடந்து வருங்கால் பரகாலரின் பாசுரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நம்மனத்தில் எழுகின்றன.

“காசை ஆடை மூடியோடிக்

காதல்செய் தானவன்ஊர் நாசம் ஆக நம்பவல்ல

நம்பி நம்பெருமான், வேயின் அன்ன தோள்மடவார்,

வெண்ணெயுண் டானிவனென்று ஏச நின்ற எம்பெருமான்

எவ்வுள் கிடந்தானே’

8. நீவச. பூஷ. - 175 9. திருவாய் - 10.4:4 10. பெரி. திரு. 2.2:1.