பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

என்பது ஆழ்வார் காட்டும் எம்பெருமான். கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர் இராமவதாரத்தில் அளவற்ற பற்றுடையவர் என்பது உலகறிந்த செய்தி. ‘'மைவண்ண நறுங்குஞ்சி’ (திருநெடுந் தாண்டகம்-21) என்ற பாசுரத்திற்கு அவர் தரும் விளக்கம் அக்கால மக்களை ஆனந்தக் கடலில் ஆழத்திவிடும் என்று பெரியோர் பணிப்பர். சிறியாத்தான் என்பவர் பட்டர் காலத்தில் இருந்த ஒரு பரம பக்தர். ஒருநாள் அவர் பட்டருடைய அருளிச் செயல்களைக் கேட்க விரும்பி அவர் பேருரை அருளும்போது அவர் இசைவு பெற்றுக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். பேருரையின் நடுவே ஒரு சமயம் ‘'சக்கரவர்த்தி திருமகனாருக்கு எல்லா ஏற்ற முண்டாகிலும் ஆச்ரிதர்களுக்காகக் கழுத்திலே ஒலை கட்டித் துதுபோன ஏற்றமில்லையே; அந்த ஏற்றம் கண்ணபிரானுக்கே யன்றோ உள்ளது?’ என்றார். அதைப் பட்டர் கேட்டருளி, “ஒய்! குணக்கடலாகிய இராமனுக்குத் துது போதல் அநிஷ்டமன்று காணும்; இட்சுவாகு வம்சத்திலே ஸ்ார்வ பெளமனாகப் பிறந்தானாகையாலே மகாராஜன் கழுத்திலே ஒலையைக் கட்டித் தூதுபோக விடுவாரைக் கிடையாமையாலே இராமன் துது போகப் பெற்றிலனத்தனை; அந்த அவதாரத்திலே திருவடி அங்குமிங்கும் போவது வருவதாய்க் கொண்டும் தூத க்ருத்யஞ் செய்து வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக் கண்டு ‘நாமும் இப்படி ஆச்ரிதர்களுக்காகத் துது போகப் பெற்றிலோமே என்று திருவுள்ளம் குறைபட்டு அக்குறை தீருகைக்காகவே பின்னை இழி குலத்திலே வந்து பிறந்து தூது சென்றான்; கூடித்திரியனென்று நிச்சயிக்கில் துதுபோக விடமாட்டார்களென்று அத்தை மறைந்து வளர்ந்தான் காணும்; அபிவிக்த கூடித்திரிய குலத்தில் பிறந்தால் ‘துது போ’ என்று ஏவ ஒருவருக்கும் நா எழாதிறே’ என்று அருளிச் செய்தாராம். இந்த இதிகாசத்திற்கு இப்பாசுரம் மூலமாக இருக்கும் என்று கருதலாம். பட்டர், கூறும் இன்சுவை மிக்க காரணம் அநுபவித்து மகிழத்தக்கது.

அடுத்த பாசுரத்தில், ‘நம் குலத்துக்கெல்லாம் தலைவன்; விரிபுகழ்சேர் நந்தகோபனின் திருக்குமாரனாக அவதரித்தவன்; நப்பின்னையின் பொருட்டுக் குரூரமான மிடுக்கையுடைய ஏழு காளைகளையும் வென்று அவளையே பரிசாகப் பெற்று மகிழ்ந்தவன். அவனே இன்று எவ்வுள்ளில் கிடக்கும்