பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

கனகவல்லித் தாயாரை வசுமதி என்றும் வழங்குகின்றனர். தருமசேனன் என்ற அரசரின் திருமகன் வசுமதியை எம்பெருமான் திருமணம் புரிந்துகொண்டான் என்பது புராண வரலாறு. நித்திய கல்யாணராகிய எம்பெருமான் அர்ச்சாவதாரத்தில் ஆண்டாள், சோழர் குலவல்லி, செஞ்சு வமிசத்துத் தலைவனின் மகள், துலுக்க நாய்ச்சியார் முதலிய பெண்களை மணந்த வரலாற்றை வைணவ உலகம் நன்கு அறியும். எந்தக் குலத்தைக் சார்ந்திருப்பினும், மனிதனால் படைக்கப் பெற்ற இந்தச் செயற்கை வரம்புகளை யெல்லாம் புறக்கணித்து, பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு எம்பெருமான் முக்தியை அளிக்கின்றான் என்ற உண்மையை நாம் சிந்திக்கின்றோம்.

இந்நிலையில் கோயிலுக்குள் ஒர் அமைதியாக இடத்தில் சில மணித்துளிகள் அமர்ந்து திருமங்கையாழ்வாரின் பாசுரங் களை மீண்டும் சிந்திக்கின்றோம். ‘தையாலாள்மேல்.’’ என்ற இரண்டாம் பாசுரத்தில் இராமாவதார வீரச்செயல் ஒன்றையே ஆழ்வார் அநுசந்திப்பதால்தான் இத்தலத்து எம்பெருமான் எவ்வுள் கிடந்தானுக்கு வீரராகவன் என்ற திருநாமம் ஏற்பட்டிருக்குமோ என்ற ஊகத்தில் இறங்குகின்றோம். அல்லது ஏற்கெனவே அந்த எம்பெருமானுக்கு ‘வீரராகவன்’ என்ற பெயர் ஏற்பட்டிருந்தால் ஆழ்வார் இராமபிரானுடைய வீரச்செயல் ஒன்றினையே இப்பாசுரத்தில் அநுசந்தித்தாரோ என்றும் கருதுகின்றோம். எது எப்படியாயினும் நம் முன்னோர் இதிகாச புராணக் கதைகளை வைத்துப் பக்தியநுபவம் குலையாமல் காப்பதற்கு என்னென்ன உக்தி முறைகளையெல்லாம் கை யாண்டுள்ளனர் என்பதை எண்ணி எண்ணி இறும்பூது அடை கின்றோம். இந்நிலையில்,

“நீர்மைகெட வைதாரும் நின்னோடு எதிர்ந்தாரும் சீர்மைபெற நின்அடிக்கீழ் சேர்க்கையினால், நேர்மைஇலா வெவ்உளத்த னேன்செய் மிகையைப் பொறுத்தருளி எவ்வுள்அத்த னே! நீ இரங்கு’

(நீர்மை-தன்மை; வைதல்-நிந்தித்தல்; சீர்மை.சிறப்பு: நேர்மை-நற்குணம்; வெவ்உளத்தன் கொடிய மனத்தினன்; மிகை -குற்றம்: இரங்கு-கருணையுடன் ஆட்கொள்க)

20. நூற். திருப். அந்.-90.