பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்றவூர் நித்திலம் 115

அற்ற குற்றம் அவைதீர

அனைய அமுக்கிக் கட்டீரே.”

என்ற ஆண்டாள் பாசுரப் பகுதியையும் நினைக்கத் துண்டு கின்றது. “காதற் பெருக்கே நாச்சியார் திருமொழி’ என்ற உண்மை யையும் புலப்படுத்துகின்றது. இப்பாசுரத்தின் தொனியை மேற்காட்டிய அய்யங்கார் அவர்களின் பாசுரத்தில் தெளிவாகக் காண்கின்றோம். இந்த உணர்வு நிலையில் நம் இருப்பிடத்திற்குச் செல்லச் சித்தமாகின்றோம்.

இந்நிலையில் பூசலார் நினைவாகப் பிற்காலத்தார் கட்டிய கோயிலையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே எழுகின்றது. ஊராரை விசாரித்து அக்கோயில் இருக்கும் இடத்தை அறிகின்றோம். கோயில் வாயிலில் கோபுரம் இல்லை; தகரக் கொட்டகை ஒன்றையே நாம் காண்கிறோம். இந்தச் சிறுகுடிலில் இருப்பவரே இருதயாலய ஈசுவரர்; பூசலார் தம் இதயத்தில் பிரதிட்டை செய்த இலிங்கத்தின் பிரதிநிதி. அவரது துணைவியே மரகதாம்பிகை. இந்த அம்பிகையின் சிலையில் பின்னமுற்றிருப் பதால் பூசை நடைபெறுவதில்லை. புதிய சிலை தயாரிலிருந்தும் ஏனோ பிரதிட்டை ஆகாமல் உள்ளது. கருவறையினுள் இருதயாலய ஈசுவரரின் அருகில் பூசல் அன்பனும் சிலை வடிவில் காணப்பெறுகின்றார். மனத்துள் வைத்து வழிபாடு நடத்திய வருக்குக் கருவறையிலும் வைத்துப் பூசனை புரிய வேண்டும் என்று நினைத்தனர்போலும் அக்கோயிலை நிறுவிய அன்பர்கள். இந்தக் கோயிலில் பூசலார் செப்புச்சிலை வடிவிலும் காணப் பெறுகின்றார். இந்தச் சிலை வடிவில் பூசலார் மார்பில் நெஞ்சுக்கு வெளியே இலிங்கத் திருவுருவம் அமைந்துள்ளனர் அன்பர்கள். பண்டையோரின் அரிய கற்பனைக்கு உரிய உருவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தனர் போலும் இவர்கள்.

பக்தவத்சலராலும் பூசலாராலும் பெரும் புகழ் பெற்ற திருநின்றவூருக்கு வேறொரு சிறப்பும் உண்டு. இந்த ஊரில் வாழ்ந்த காளத்திவாணர் என்ற வள்ளலாலும் இவ்வூருக்கு இலக்கியப் புகழ் ஏறிபட்டுள்ளது. நின்றை நித்திலம் பக்தர்கட்குத் தண்ணளி சுரப்பது போலவே நின்றைக் காளத்தி வாணர் வறுமையால் வாடும் புலவர்களை ஆதரித்து வந்தார். நீண்ட நாளாக வறுமையுடன் போராடிய கவிஞர் ஒருவர் நின்றவூரை

17. நாச்.திரு.13:7