பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அல்லிக் கேணி அச்சுதன்

பண்டு நடைபெற்ற பாரதப் பெரும் போரில் பார்த்தனுக்குத் தேரூர்ந்து கீதையை உபதேசித்த வரலாற்றை நாம் அறிவோம். அன்று பார்த்தனுக்கு அஞ்ஞான இருளை அகற்றிய கீதையின் பொருள் இன்று பாரிலுள்ள மக்கட்கெல்லாம் பயன்பட்டு வருகின்றது. பாரதப் போரின் முதல் நாளில் போர்த் தொடக்கத்திலே. எதிர் நின்ற வீரர்கள் யாவரும் தன் உறவினராய் இருக்கக் கண்டு, மனம் சோர்ந்து, வாள் தடக்கை வில்நெகிழத் திகைத்துத் தேர்த்தட்டில் இருக்கின்றான் பார்த்தன். சாரதியாக அமைந்த கண்ணன் தத்துவப் பொருளை விளக்கி அவன் மயக்கத்தைப் போக்கத் தொடங்குகின்றான். ‘பலன் கருதாது உன் கடமைகளைச் செய்யக் கடவாய்’ என்பதே அவன் உரைத்த தத்துவத்தின் சாரம். பாரதக் கதையில் கண்ணன் அர்ச்சுனனுக்குக் கீதையை உபதேசம் செய்ய நேர்ந்த இடமும் காலமும் மக்கள் மனத்தில் ஆழப்பதிய வேண்டியவை; அன்று அர்ச்சுனனுக்குக் காட்டின கீதையின் ஒளியில் நாம் நடந்து வாழ்க்கையை நடத்த வேண்டியவர்கள்.

‘அர்ச்சுனா, இப்போது உன் மனம் மாயையின் வசப்பட்டுள்ளது. அதுதான் இப்போது உள்ளதை இல்லாத தாகவும், இல்லாததை உள்ளதாகவும், ஒன்றைப் பிறிதொன் றாகவும் காட்டி நிற்கின்றது. மனம் அந்த மாயையின் ஆற்றலுக்கு உட்படும்பொழுது, பொருள்களின் நிலையை உள்ளபடி அறியும் தத்துவ ஞானம் உன்னிடம் தோன்றவில்லை. மாயையின் ஆற்றலால் உன்னிடம் இப்போது தோன்றியுள்ளது விபரீத ஞானம். அதன் காரணமாகவே, நித்தியமான ஆன்மாவுக்கு யாதொரு தொடர்பும் படாமல் அநித்தியமான உடலையே பற்றிய தாய் முதலியோரிடத்துச் சுற்றத்தவர் என்ற பொய் அன்பு உன்னிடம் நிலைபெற்று நிற்கின்றது’ என்று கூறுகின்றான்.

மேலும், அவன் தரும் விளக்கம்: ‘வெற்றி வீரனே, இந்த மனம் மெய், வாய், கண், செவி, மூக்கு என்னும் ஐம்பொறிகளின்