பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

துணைக்கொண்டு ஊற்றின்பம், சுவை, ஒளி, ஒசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களையும் துய்க்கின்றது. இங்ஙனம் அநுபவிக்குங்கால் அது சத்துவம், இராஜசம், தாமசம் என்ற முக்குணங்களுடனும்; காமம், கோபம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் வேறு ஆறு உணர்ச்சிகளுடனும் நல்லுறவுகொண்டு ஆட்சி புரிகின்றது. இதனால் தூய நல் அறிவன் என்ற தோன்றல் (புருஷன்) தோன்றுவதற்கு வழி இல்லாது போகின்றது. இங்ஙனம் ஐம்பொறிகட்கு வசப்பட்டு அவற்றின் புலன்களிலே முக்குணங்களோடும் மற்றும் பல தீய சிந்தைகளோடும் மனத்தை அதன் போக்குப்படி யதேச்சையாக விட்டிடாமல் அடக்கிவைத்தால் தத்துவ ஞானம் தோன்றும்.”

‘இன்னும் கேட்பாயாக :

“அந்தநல் அறிவன் தன்னை

அறிந்தவர் அறிஞ ராவார்; தந்தையால் வகுக்கப் பெற்ற

சராசரப் பொருள்கள் தோறும் வந்தஆன் தீம்பால் நெய்போல்

உயிர்க்குஉயிர் ஆகி வாழும் பந்தம்.அது உணர்ந்து நேரே

EUs [ PS E PTo | s E “”

(அறிவன்-சுத்த ஞானம் என்ற புருஷன்: தந்தை-இறைவன்; சரம் அசரப் பொருள்கள் இயங்கு தினைப் பொருள்களும் நிலைத்திணைப் பொருள் களும்; ஆன்வந்த தீம்பால்-பசுவினிடமாக வந்த இனியபால்; உயிர்க்கு உயிராகி - சீவான்மாக்களுள்ளும் உறையும் பரமான்மாவாய்; பந்தம் அது - உறவினை(சரீர-சரீரிபாவனை) எல்லாச் சீவான்மாக்களிடத்தும் பரமான்மா ஒரு தன்மையாகப் பொருந்தியிருக்கையில் அவற்றுள் சிலவற்றைப் பகையாகவும், சிலவற்றை நட்பாகவும் கருதுவது மாயசெயலேயன்றி வேறு அன்று என்பதை உணர்வாயாய.’

‘மேலும் கூறுகின்றேன், கேள்:

‘உம்பரும் முனிவர் தாமும்

யாவரும் உணரா ஒன்றை

இம்பரின் உனக்கு நானே

இசைவுற உணர்த்தா நின்றேன்;

1. வில்லிபாரதம் - விட்டுமப் பருவம்-முதற்போர்ச் சருக்கம் - 4.