பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கேணி அச்சுதன் 119

ஐம்பெரும் பூதத் தானும்

அமைத்தன உடலம் யார்க்கும்;

நம்பனும் ஒருவன் உள்ளே

ஞானியாய் நடத்து கின்றான்

• 32

(உம்பர்-தேவர்; ஒன்றை-ஒரு தத்துவப் பொருளை இம்பர்-இவ்விடத்து,

இசைவு உற-பொருந்தும்படி; உடலம்-உடல்கள்; யார்க்கும்-எல்லாப்

பிராணிகட்கும்; நம்பன் -இறைவன்)

கடைப் பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பனவற்றினுள்ளே மனிதன் புகுந்து அவற்றைக் கொண்டு பல்வேறு தொழில்களை நடத்துவதைப் போலவே, இறைவனும் உயிருள்ள பொருள்களிடத்தும், அந்தர்யாமியாகத் தங்கிருந்து தொழில் நடத்துகின்றான் என்பதைத் தெளிவாயாக.

‘என்னை நீ புகலக் கேண்மோ

‘எங்குமாய் யாவும் ஆகி மன்னிய பொருளும் யானே;

மறைக்கெலாம் முடிவும் யானே

(புகல-சொல்ல; கேண்மோ-கேட்பாயாக; மன்னிய-அழியாது நிலைபெற்ற: பொருள்-பரம்பொருள்; மறை-வேதம்)

என்ற உண்மையையும் உணர்வாயாக.”

இங்ஙனம் தான் உபதேசித்த உண்மைப் பொருள் பார்த்தனுக்குக் கட்புலனாகி அவனுடைய திகைப்பைத் தீரவொழித்தற்குத் தன் நிலையை ‘விசுவரூபமாகக் காட்டு கின்றான் பார்த்தசாரதியாகிய கண்ணன். இதனை வில்லிபுத்துரார்,


நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக” என்று தன்னிலை அவற்குக் காட்டித்

தத்துவம் தெளிவித் தானே.”

(மயக்கு-திகைப்பு: நேயம்-உறவினரென்னும், நண்பினரென்றும் கொண்ட

அபிமானம்; தத்துவம்-உண்மை உணர்வு)

என்று விளக்குகின்றார்.

2. வில்லிபாரதம் - விட்டுமப் பருவம் - முதற்போர்ச் சுருக்கம் -5. 3. வில்லிபா : வீட்டுமப் பருவம் - முதற்போர் - 7.