பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

கண்ணனின் கீதோபதேசம், விசுவரூப தரிசனம் இவை பார்த்தனின் மயக்கத்தைத் தெளிவிக்கின்றன. செருச் செய்த வற்கும் இசைகின்றான். அந்தப் போரில் பாண்டவர்கள் வாகை சூடுவதற்கும் காரணமாக இருந்தவனும் கண்ணனே என்ப தையும் நாம் அறிவோம். இந்தக் கருத்துகளையெல்லாம் அடக்கிக் காட்டும் வில்லிபுத்துராரின் பாசுரத்தை ஒதி உளங்கரை கின்றோம்.

“மேவரு ஞானா னந்த

வெள்ளமாய் விதித்தோன் ஆதி மூவரும் ஆகி அந்த

மூவருக்குள் முதல்வன் ஆகி யாவரும் யாவும் ஆகி

இறைஞ்சுவார் இறைஞ்சப் பல்பல தேவரும் ஆகி நின்ற

செங்கண்மால் எங்கள் கோவே’

(மேவு அரு-அடைதற்கு அருமையான; யாவரும்-எல்லா உயர்திணைப் பொருள்களும்; யாவும்-எல்லா அஃறிணைப் பொருள்களும்; இறைஞ்சுவார் - வணங்குவதற்குரியவர்கள்; கோ-தலைவர்)

என்பது பாடல். இப்பாடலை ஒதியவுடன் மீண்டும் கீதையின் உட்பொருள் நம் சிந்தையில் எழுகின்றது. அல்லிக்கேணி அச்சுதனைக் காண விரைகின்றோம்.

‘மா மயிலை மாஅல்லிக் கேணி என்று திருமழிசை யாழ்வாரால் குறிப்பிடப்பெறும் மயிலாப்பூரும், திருவல்லிக் கேணியும் சென்னையில் பழம்பெருமை வாய்ந்த பகுதிகளாகும். திருமயிலை பழங்காலத்தில் (ஆழ்வார்கள் காலத்தில்) மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் நிறைந்த ஒரு பட்டினமாகத் திகழ்ந்தது.

மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்

மாடமாளிகையும் மண்டபமும் தென்னன்தொண் டையர்கோன் செய்தநல் மயிலை’

என்ற திருமங்கை மன்னன் வாக்கினால் இதனை அறியலாம். திருவல்லிக்கேணியோ ஒரே பசுஞ்சுடர்ச் சோலையாக விளங் கியது.

4. வில்லிபா - வீட்டுமப்பருவம் - முதற்போர் (காப்பு) 5. பெரி. திரு. 2.3:11.