பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கேணி அச்சுதன் 121

‘குரவமே கமழும் குளிர்பொழி லூடு

குயிலொடு மயில்கள்நின் றாட

இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத்

திருவல்லிக் கேணி’

என்ற ஆழ்வாரின் வாக்கு இதனை அரண் செய்கின்றது. மயிலையில் பொருட்செல்வர்களும் பக்திச் செல்வர்களும் இருந்தனர். வாணிகத்துறையில் மேம்பாடுற்றிருந்த மயிலாபுரிக்கு வங்கக் கடல்மூலம் மரக்கலங்கள் வந்து போவதுண்டு. திருவல்லிக்கேணியோ வைணவம் என்னும் பக்திப் பெருஞ் செல்வத்தின் நிலைக்களனாகத் திகழ்ந்தது. இந்தத் திருவல்லிக் கேணியில்தான் எம்பெருமான் பார்த்தசாரதி நின்ற திருக் கோலத்தில் திருக்கோயில் கொண்டுள்ளான். இக்கோயிலின் திருக்குளம் அல்லிப்பூக்கள் நிறையப்பெற்றிருந்ததால் அல்லிக் கேணி என்ற பெயர்பெற்று அதுவே நாளடைவில் தலத்திற்கும் உரிய பெயராகி நிலைத்துவிட்டது.

இந்தக் கருத்துகள் நம் மனத்தில் குமிழியிட்டெழுந்த வண்ணம் திருக்கோயிலினுள் நுழைவதற்குச் சித்தமாகின்றோம். திருக்கோயிலின் முன்பு அமைக்கப் பெற்றுள்ள மண்டபங்களைக் கடந்து ‘மகா மரியாதை வாயில்’ என்று வழங்கப்பெறும் இடத்திற்கு வருகின்றோம். இதன்மேல்தான் இராஜகோபுரம் கட்டப்பெற்றுள்ளது; ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட இக்கோபுரம் சில ஆண்டுகட்கு முன்புதான் புதுப்பிக்கப் பெற்றுள்ளது. இந்த வாயிலைக் கடந்து அதன் பின்னர்த் தொண்டரடிப் பொடிகளின் சந்நிதியைக் கடந்துதான்,

‘பார்ஏறு பெரும்பாரம் தீரப் பண்டு

பாரதத்துத் தூதுஇயங்கி பார்த்தன் செல்வத்

தேர்ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை

செருக்களத்துத் திறல்அழியச் செற்றான் தன்னை

  • >7

(பார்-பூமி, பண்டு-முற்காலத்தில், துது இயங்கி-துதுசென்று; பார்த்தன் -

அருச்சுனன்; சாரதி-பாகன்; எதிர்ந்தார்-எதிரிகளின்; செருக்களம்-போர்களம்;

திறல் - வலி; செற்றான்-ஒழித்தவன்) என்று திருமங்கை மன்னன் போற்றும் பார்த்தசாரதியைச் சேவிக்க வேண்டும்.

6. மேலது - 2, 3 :7 7. பெரி. திரு . 2. 10:8.