பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதழிலும் வெளிவந்தவை. இவற்றை வெளியிட்ட மலராசிரியர் கட்கும் இதழாசிரியருக்கும் என் நன்றி என்றும் உரியது.

இந்நூலை யான் எழுதி வெளியிடுவதற்கு இசைவு தந்த பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினருக்கும் (Syndicate) சிறப்பாகப் பல்கலைக் கழகத்தைத் திறம்பட இயக்கிவரும் அதன் துணைவேந்தர் டாக்டர் டி. ஜகந்நாத ரெட்டி அவர்கட்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன்.

காலத்திற்கேற்ற நூல்களை, சிறப்பாகப் பக்தி நூல்களை, வெளியிட்டுச்சிறந்த முறையில் தமிழ்ப்பணியாற்றி வருபவர்கள் எஸ். ஆர். சுப்பிரமணியபிள்ளை பதிப்பகத்தார். ‘மலை நாட்டுத் திருப்பதிகள்’ என்ற நூலை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்ட மைக்கு அவர்கட்கும், அவர்களது சென்னைக் கிளையைச் சிறந்த முறையில் திறம்படச் செயற்படச் செய்து வரும் அதன் பொறுப்பாளர் கந்தன் அடிமை திரு. எஸ். பி. சண்முகம் பிள்ளை அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றியைப் புலப்படுத்துகின்றேன்.

சென்னை உயர்நீதி மன்றத்து நீதிபதி திரு. என். கிருஷ்ணசாமி ரெட்டி அவர்களின் அரிய நட்பினைப் பெறச் செய்தது இறைவனது திருவருள். பழுதற ஒதிப் பாங்குடன் நடந்துவரும் அன்னாரைத் தமிழுலகம், சிறப்பாக வைணவ உலகம், நன்கு அறியும். ‘தீதில் நன்னெறி'யுடன் வாழும் அவர்கள் தம்முடைய பக்திச் சுவை நிறைந்த பேச்சால் தமிழ்ப் பெருமக்களின் உள்ளங்களைக் கவர்ந்து அங்கு நிரந்தர இடம் பெற்றவர்கள். இவருடைய ஆணித்தரமான பேச்சில் இவருடைய உயிர் நாடி பேசும். “நாடு நகரமும் நன்கறிய மோ நாராயணாவென்று பாடும் மனமுடைய பக்தர்”[1] இவர்; சீலம் நிறைந்த பண்புடைச் செல்வர். “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே”[2] என்ற தொல்காப்பியக் கருத்திற்கு எடுத்துக்

  1. திருப்பல்லாண்டு 4 (பெரியாழ்வார்)
  2. தொல், சொல், நூற்பா - 1

x