பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

விழி நெருப்புப் பொறி கிளர்கின்ற கண்கள்; பேழ்வாய்-பெரிய வாய்; தேவை

- தேவனை)

என்ற பாசுரம் நம்மிடற்றொலியாக வெளிப்படுகின்றது. அன்று பிரகலாதன் பொருட்டுத் துணினின்றும் வெளிப்பட்ட நரசிங்கப் பெருமானே இன்று இங்கு அர்ச்சாவதார வடிவத்ததுடன் நமக்குச் சேவை சாதித்துத் திருவருள் பாலிக்கின்றான் என்று நினைந்து பரவசப்படுகின்றோம்.

அடுத்து, ஆண்டாள் சந்நிதிக்கு வருகின்றோம்.

‘கோலச் சுரிசங்கை மாயன்செவ்

வாயின் குணம்வினவும் சீலத் தனள்தென் திருமல்லி

நாடி செழுங்குழல்மேல் மாலைத் தொடைதென் அரங்கருக்(கு)

ஈயும் மதிப்புடைய சோலைக் கிளி,அவள் தூயநற்

பாதம் துணைநமக்கே’

(கோலச்சுரி சங்கு.அழகிய புரியினையுடை சங்கு; மல்லி-ஒருநாடு; குழல் கூந்தல்: ஈயும்-தரும்)

என்ற பாசுரத்தை நினைந்த வண்ணம் பெரியாழ்வாரின் அருமைத் திருமகள் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியைச் சேவிக்கின்றோம். ஈசுவரனையும் உயிர்களையும் ஆளும் திறமையினால் ‘ஆண்டாள் என்ற திருப்பெயருடன் இலங்கும் எம்பெருமாட்டியை மனம் ஆரச் சேவிக்கின்றோம். இங்ஙனம் பிராகாரத்திலுள்ள நால்வரையும் சேவித்த நிலையில் பிராகாரத் தினை வலம் வந்து பார்த்தசாரதியின் சந்நிதிக்குள் நுழைவதற்குச் சித்தமாகின்றோம். அதற்கு முன்னதாக ஆண்டாள் சந்நிதியின் அருகிலிருந்து பார்த்தசாரதியின் கருவறையின் மேலுள்ள விமானத்தைச் சேவிக்கின்றோம்.

பார்த்தசாரதியின் சந்நிதிக்குள் நுழைந்து வலப்பக்கமாகத் திரும்பியதும் புயங்க சயனத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு எழுந்தருளியிருக்கும் அரங்கநாதன் நம்மை ஆட்கொள்ளுகின்றார். இந்த அரங்நாதனே வேதவல்லித் தாயாரை மணந்து கொண்ட பெருமான். இவருக்கு ‘மந்நாதன்’

11. நாச், திரு. தனியன் , திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச் செய்தது.