பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கேணி அச்சுதன் 129

‘கொண்டில் வண்ணன்’ என்பதற்கேற்ப நல்ல கவர்ச்சியான கரிய திருமுக மண்டலத்துடனும் திருமேனியுடனும் காட்சியளிக் கின்றார். முகத்தில் பாரதப்போரில் ஏற்பட்ட வடுச்சின்னங்கள் காணப்பெறுகின்றன. ஆடை அணிகலன்கள் யாவும் வைரத் தாலானவை. கையில் சாட்டை கொண்டு ‘இந்திரன் சிறுவன் தேர்முன் நிற்கும் கோலமாக எழுந்தருளியிருப்பது மிகுந்த ஏற்றமுடையது. ஆனால், இந்தச் சாட்டையை அவர் மேனியை அலங்கரிக்கும் நகைகள் மறைத்து விடுகின்றன. இங்ஙனம் மூலவர், உற்சவர் இவர்களின் திவ்விய மங்கள விக்கிரகங்களின் அழகில் நமது மனத்தைப் பறிகொடுத்து நிற்கும் நிலையில்,

“வில்பெரு விழவும், கஞ்சனும், மல்லும்,

வேழமும், பாகனும் வீழச் செற்றவன் தன்னை, புரம்ளரி செய்து

சிவன்.உறு துயர்களை தேவை, பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு

பார்த்தன்தன் தேர்முன் நின்றானை, சிற்றவை பணியால் முடிதுறந் தானைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே.”

(வில்பெரு விழவு-கம்சன் தன் வில்லுக்கு எடுத்த பெருவிழா மல் -

மல்லர்கள், வீழ - நாசம் அடைய வேழம்-யானை (குவலயாபீடம்);

களை போக்கும்; பற்றலர் - பகைவர்; வீய-மாள; சிற்றவை-கைகேயி)

என்ற பெரியதிருமொழிப் பாசுரம் மிடற்றொலியாக வெளிப்படுகின்றது. பார்த்தசாரதியாக எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் வீரச்செயல்களும், சிறுசேவகங்களும் நம் சிந்தையில் குமிழியிட்டு எழுகின்றன. கண்ணனாகவும் இராமனாகவும் திருவதரித்து அக்காலத்து மக்களை வாழ்வித் தருளின எம்பெருமான் பின்னானாராகிய நம்போலியரையும் வாழ்விக்கத் திருவுள்ளங்கொண்டு அவன் எழுந்தருளியிருக்கும் கருணைத் திறத்தை வியந்து போற்றுகின்றோம்.

திருமங்கையாழ்வார் அநுசந்தித்து இனியரான நிகழ்ச்சி களை ஒன்றன்பின் ஒன்றாக எண்ணி மகிழ்கின்றோம். நஞ் சூட்டிய முலையுடன் கண்ணனுக்குப் பாலூட்டி அவனைக் கொல்வதற்காகத் தாயுருவுடன் வந்த பூதனையின் உயிரையும் சேர்த்து அமுது செய்தவன் எம்பெருமான்; திருமால் கடல்

16. பெரி. திரு. - 2.3 :1. தொ.நா-9