பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

துள்ளார். ‘ஏரார் பொழில்’ என்ற அடைமொழி திருவிட எந்தைக்கும் திருநீர்மலைக்கும் கூட்டியுரைத்தல் தகும். இரண்டுமே சோலைகள் சூழ்ந்த இடங்களாகும். சோலை என்றால் மான் முதலிய பிராணிகள் வாழுமல்லவா? இத்தகைய பிராணிகளை நேரில் கண்ட ஆழ்வார்,

“கலைவாழ் பிணையோ டனையும் திருநீர்

மலைவாழ் எந்தை மருவும் ஊர்’

(கலை-ஆண்மான் பினை-பெண்மான்; அணையும்-புணரும், சேரும்;

மருவும் -பொருந்தி வாழும்)

என்று கூறியிருத்தல் ஈண்டு எண்ணி மகிழத்தக்கது. கூடலூர் எம்பெருமானைச்சேவித்துக் கொண்டிருக்கும்பொழுது திருநிர் மலை வாழ் எந்தை’ ஆழ்வார் நினைவில் வருகின்றார். நீர்வளம் நிலவளம் மலிந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநறையூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஆழ்வார் சேவித்துக் கொண்டிருக்கும் பொழுதே திருநீர்மலை எம்பெருமான் அவருக்குக் காட்சி தருகின்றார். ஆழ்வாருக்குத் திருநீர்மலையான் மீது சிறப்பான ஈடுபாடு இருப்பதுபோல், திருநீர்மலை எம்பெரு மானுக்கும் ஆழ்வார்மீது அளவிலடங்காச் சிறப்பான கருணை உள்ளதுபோலும்! ஆழ்வாரும் ‘திருநீர் மலையானை.......... .நறையூரில் கண்டேனே’ என்று பாசுரத்தைத் தலைக்கட்டு கின்றார்.’

திருநறையூர் எம்பெருமான்மீதுள்ள இன்னொரு

பாசுரத்தாலும் ஆழ்வாருக்கு இத்தலத்து எம்பெருமான் மீதுள்ள தனி அன்பு தெளிவாகின்றது.

“கதியேல் இல்லை,நின்

அருள்அல்லது எனக்கு; நிதியே:திரு நீர்மலை

நித்திலத் தொத்தே! பதியேபர வித்தொழும்

தொண்டர் தமக்குக் கதியே!உன் னைக்கண்டுகொண்

டுய்ந்தொழிந் தேனே’

15. பெரி. திரு. 5.2:8. 16. பெரி. திரு. 6.8:2 17. மேலது - 7, 1 :7