பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்மலை நீர்வண்ணன் 137

(நிதியே-நிதிபோன்றவன்; நித்திலம்-முத்து; தொத்து-மாலை; பதி-திவ்விய

தேசம், பரவி-ஏத்தி: தொண்டர்-அடியார், உய்ந்து-விழைத்து)

திருநறையூர் எம்பெருமானைச் சேவித்துக் கொண்டிருக்கும் போது இந்த எம்பெருமான் காட்சி தரவே, “திருநீர்மலையில் கோயில் கொண்டிருக்கும் முத்துமாலை போன்ற எம்பெரு மானே, உன் திருவருளைத் தவிர எனக்கு வேறொன்றும் புகல் இல்லை; எனக்கு வைத்தமா நிதியும் நீயே, உன்னை ஈண்டும் காண்கின்றேன்; உய்யவும் பெற்றேன்’ என்று களிப்புடன் பேசுகின்றார் ஆழ்வார்.

மேற்கண்டவற்றிலிருந்து வைணவ தத்துவத்தின் ஓர் உண்மை தெளிவாகின்றது. அஃதாவது, விபவாவதாரங்களில் எம்பெருமானே எல்லா அவதாரங்களையும் எடுத்தான் என்பதுபோல, ‘விண்ணகரம், வெஃகா, விரிதிரை நீர் வேங்கடம், மண் நகரம் மாமாடம் வேளுக்கை, மண்னகத்த தேன்குடந்தை, தேனார் திருவரங்கம், தென்கோட்டி’ ‘'கண்டியூர், அரங்கம், மெய்யம், கச்சி, பேர், மல்லை,’ “சீரார் திருவேங்கடமே, திருக்கோவலுரே, மதிள் கச்சி ஊரகமே, பேரகமே’ என்பன போன்ற திவ்விய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள் யாவரும் ஒருவரே என்பதாகும். ஒரே எம்பெருமானே ஆங்காங்குள்ள பக்தர் களுக்குச் சேவை சாதித்து அவர்களை உய்விக்கும் பொருட்டு அங்ஙனம் எழுந்தருளியுள்ளான் என்பது வைணவர்களுடைய நம்பிக்கை.

இந்த எண்ணங்கள் நம் மனத்தில் எழுந்த வண்ணம் பல்லாவரம் பேருந்து நிலையத்தினின்றும் குதிரை வண்டியில் மூன்று மைல் தொலைவிலுள்ள திருநீர்மலையை நோக்கி வருகின்றோம். நெடுஞ்சாலையினின்றும் பிரியும் குறுஞ்சாலை வழியாக நாம் போய்க்கொண்டிருக்கும் பொழுதே சாலைக்கு இருபுறமுள்ள பச்சைப்பட்டு விரித்தாற்போன்ற நெல்வயல்கள் நம் கண்ணில் படுகின்றன. அவற்றைக் கண்டுகளித்த வண்ணம் திருக்கோயிலை நோக்கி வருங்கால் தொலைவிலிருக்கும் பொழுதே திருக்கோயிலின் கோபுரம், கொடிமரம் ஆகியவை நம் கண்ணில் படுகின்றன.

18. மூன். திரு - 62. 19. திருக்குறுந் 19. 20. சிறிய திருமடல் - கண்ணி - 69, 70.